gov

தமிழ்
  • இலங்கையில் தற்பொழுது ஏறக்குறைய 230,000 தொழிலதிபர்கள் அல்லது உரிமையாளர்கள் இருக்கின்றனர், இது முழு தொழில் புரியும் சனத்தொகையில் 2.8% மாகும்.
  • கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் தகவலின்படி 75%மான இலங்கையிலுள்ள மொத்த தொழில் நிறுவனங்கள் சிறிய மத்திய தொழில் நிறுவனங்களாக (SMEs) வகைபப்படுத்தப்பட்டுள்ளது, ஏனைய ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் வியட்னாமின் தொழில் முனைவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது நாடு பின்தங்கிய நிலையியே இருக்கிறது.
  • வியட்னாமில் 19.6%மான தொழில் புரிவோர் தொழிலதிபர்கள் அல்லது உரிமையாளர்களாக இருக்கின்றனர், அதே நேரத்தி தாய்லாந்தில், இந்த எண்ணிக்கை அதிகமானதாக 27.5%மாக இருக்கிறது.
  • அதிக சனத்தொகையை கொண்ட நாடுகளான சீனா மற்றும் பங்களா தேசத்தில் முறையாக 11.6% மற்றும் 7.5%மாக இருக்கிறது, இது அதிக அளவான தொழில் முனைவோர்களை சுட்டிக்காட்டுகிறது.
  • இலங்கையுடன் சமமான சனத்தொகையை கொண்ட நாடுகளின், அளவு உறுதியாக 10%மாக இருக்கிறது.
  • இந்த தரங்களில், இலங்கை மிகவும் பின்தங்கிய நிலைமையில் உள்ளது மற்றும் நாட்டின் எதிர்ப்பார்க்கும் வளர்ச்சி வீத அடைவுகளுக்கும் மற்றும் உலக பொருளாதரத்துடன் போட்டியிடவும் தொழில் முனைவோரை அதிகரிப்பது தேவையாகும்.
01 02 11
  • V2025 இலங்கை தொழில் நிறுவன திட்டங்கள் உத்வேகமாக விளங்க எதிர்ப்பார்க்கப்படுகிறது, குறைந்தபட்சம் 100,000 புதிய தொழில் முனைவோரை உருவாக்கவும் அதோடு இருக்கின்ற தொழில் முனைவோரை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • இலங்கையில் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை அடைவதற்கு உதவுவதற்கு இது ஒரு முன் முயற்சியாக தொழில் முனைவோர் (தொழில் முனைவோர் மூலமாக சுய தொழில்) முறையை உருவாக்கல்.
  • இருக்கின்ற தொழில் முனைவோரினதும் சாத்தியமான தொழில் முனைவோரினதும் திறன்களை விருத்தி செய்தல். V2025 இலங்கையின் மாற்றத்திற்கான விணையூக்கியாக இலங்கை தொழில் நிறுவனம் ஒரு முன் முயற்சியாக இருக்கும், மற்றும் அரசாங்கத்தின் சகல தீர்வுகளுக்குமான கோரிக்கைகளை பொதுமக்கள் தன் நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு சகாப்தமாகவும், தொழில் முனைவுகளை ஊக்குவித்தல்.
  • சகலவற்றிலும் வியாபார சந்தர்ப்பங்களை அதிகரிக்க செய்து உலக பெறுமதி சங்கிலியுடன் இலங்கையை தொடர்புபடுத்தி கிராமத்திலிருந்து ஆரம்பித்து தொழில் முனைவோர் புரட்சிக்கான அரங்கமாக இதை அமைத்தல்.
  • இலங்கையில் பெண் தொழில் முனைவோரின் பங்களிப்பை அதிகரிக்க பங்களித்தலும் ஊக்குவித்தலும். அவர்களின் சுய தொழில் முயற்சிகளை முன் கொண்டு வந்து திறன்கள் மற்றும் வளங்களுடன் அவர்களின் முன் முயற்சிகளை ஊக்குவித்து தொழில் முனைவோரை இயக்குதல்.
  • மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவுகளுடன் தொழில் முனைவோரை ஊக்குவித்தல். அவர்களின் தலையீடு மற்றும் புதியன புகுத்துவதன் ஊடாக சமூகத்தில் சகல பிரிவினரும் பொருளாதாரத்திற்கு பங்களிப்பை செய்தல்.
  • கிராமத்தில் ஆரம்பித்து, அடி மட்டத்தில் புதியன புகுத்தும் நவீன மனநிலையை உருவாக்கல். அதன் மூலமாக கிராமிய பொருளாதாரத்தை உலக பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்தி மேம்படுத்தலாம்.
  • இந்த முன் முயற்சிகள் பிரதான பொருளாதாரத்தில் மற்றும் இலங்கையின் தனிநபர் வருமான குறிகாட்டிகளில் சமூக வளர்ச்சி, வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் ஏற்றுமதியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • அதற்கு மேலதிகமாக, சமூகத்தில் பெண்களின் மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவினரின் வருமானத்தை அதிகரிக்க உதவுவதற்காக திட்டம் கவனம் செலுத்துகிறது.